Posted on: August 10, 2018

தோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்!

ஒரு விஷயத்தை அப்படியே சொல்வதற்கும், சில எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ‘சர்ப்ரைஸ்’ கொடுப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கும். சர்ப்ரைஸைப் பொறுத்தவரை கொடுப்பவருக்கும், அதை பெறுபவருக்கும் என்றுமே அது ‘எவர் கிரீன்’ தான்! ஃபன்னுக்காக செய்யப்படும் இந்த சர்ப்ரைஸே உங்கள்  கரியராக மாறினால் எப்படி இருக்கும்? ஆம், அதைத்தான் பாக்யா பிரபுவும் ஷாகுல் ஹமீதும் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஸ்டார்ட் அப்பின் பெயர் ‘சர்ப்ரைஸ் மச்சி’.

‘என் சொந்த ஊர் சேலம், ஷாகுல் வேலூர்க்காரர்’, என பேசத் தொடங்கினார் பாக்யா. ‘நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபிஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தோம். அங்க யாருக்காச்சும் பர்த்டே வந்துச்சுன்னா, மத்த எல்லோரையும் விட நாங்க ரெண்டு பேரும் தான் அவங்கள எப்படி சர்ப்ரைஸ் பண்றதுன்னு மண்டைய பிச்சிக்கிட்டு யோசிப்போம். கடைசில அதுக்கான அவுபுட்டும் நல்லா வரும். சரி இதையே அடிப்படையா வச்சி எதாச்சும் பிஸினஸ் பண்ணுவோம்ன்னு யோசிச்சப்போ, முதல்ல ‘ஹேண்டி கிராஃப்ட் கிஃப்ட் ஷாப்’ ஆரம்பிக்கலாம்ன்னு தான் நெனச்சோம். பட் இத பத்தி ரெண்டு பேரும் ஒரு நாள் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும் போது எங்களுக்கே சர்ப்ரைஸா ‘சர்ப்ரைஸ் மச்சி’ உதயமாச்சு.

 

நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ், ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கிற ஐடியாவும் எங்களுக்கு இருந்ததால டக்குன்னு ஒர்க் அவுட் ஆகிடுச்சு.

 

‘ஐடியாவை யோசிச்ச அடுத்த நாள்ல இருந்தே இதுக்காக ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டோம்’ எனத் தொடர்ந்தார் ஷாகுல். கூடவே ஆன்லைன் கிஃப்ட் ஸ்டோரும் தொடங்குனோம். சர்ப்ரைஸ் மச்சியை பொறுத்த வரைக்கும் 24*7 வேலை இருக்கும். நிறைய மிட் நைட் சர்ப்ரைஸ் தான் இருக்கும். எங்க ஐடியாவோட கிளைண்ட்ஸும் நிறைய ஐடியா தருவாங்க. கல்யாணம் பேசி முடிச்சதுமே வருங்கால மனைவிக்கு சர்ப்ரைஸ் குடுக்க சொல்றவங்க இதுல நிறைய பேர். அப்புறம் கணவன்/மனைவியோட பர்த் டேவ வாரம் முழுக்க தினமும் சர்ப்ரைஸ் பண்ணி செலப்ரேட் பண்றவங்களும் இருக்காங்க. சர்ப்ரைஸ் லவ் புரபோசல், ஐ.டி.ல வேலை முடிஞ்சி வர்றவங்கள நைட் 2 மணி, 3 மணிக்கு சர்ப்ரைஸ் பண்றதுன்னு நிறைய பண்ணிட்டோம்.

எங்களோட பிளஸ் என்னன்னா, எல்லாமே கஸ்டமைஸ்டா இருக்கும். எல்லா பட்ஜெட்லயும் பண்ணுவோம். குறைஞ்ச பட்ஜெட்ல பண்ணுனா கூட அதுல பெஸ்டா என்ன பண்ண முடியுமோ அத தான் பண்ணுவோம். சிலர் 2,3 மாச்த்துக்கு முன்னாடியே புக் பண்ணுவாங்க, பலர் 1 மணி நேரத்துக்கு முன்னாடி தான் ஃபோன் பண்ணுவாங்க, ஸோ நாங்க எல்லா நேரத்துலயும் ரெடியா இருப்போம்.

இப்போ சென்னைல நாங்க பண்றோம். மத்த ஊர்கள்லயும் இத கேள்வி பட்டு கேக்குறாங்க. ஸோ, பெங்களூர், திருச்சி, திண்டுக்கல், பெருந்துறை, ஈரோடு, ஊட்டின்னு தமிழ்நாடு முழுக்க டீம் ஃபார்ம் பண்ணி வச்சிருக்கோம். அவங்க எல்லாருமே காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ்.

சரி உங்களின் மறக்க முடியாத சர்ப்ரைஸ் எது என நாம் கேட்க,

சமீபத்துல சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி உட்பட அந்த டீமை சர்ப்ரைஸ் பண்ணுனது தான். நாங்களே ஆல்ரெடி சி.எஸ்.கே வை சர்ப்ரைஸ் பண்ணனும்ன்னு யோசிச்சப்போ, கரெக்ட்டா எங்க கிளைண்ட் மூலமா அந்த வாய்ப்பு கிடைச்சது. அவங்க தோனியை சர்ப்ரைஸ் பண்ணனும், கிரியேட்டிவ் ஐடியாவோட வாங்கன்னு சொன்னாங்க. அவங்கல்லாம் எவ்ளோ பெரிய பெரிய ஈவென்ட்ஸ் எல்லாம் பாத்துருப்பாங்க. குறிப்பா தோனி குழந்தைங்கக் கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாரு. அதனால ஒரு 20 குழந்தைங்கள வச்சி இந்த சர்ப்ரைஸ் பண்ணுனோம். அதுக்காக நிறைய ஸ்கூல்ஸ் போய் நாங்களே குழந்தைங்கள செலக்ட் பண்ணுனோம். ஒரு வாரம் அவங்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஆனா அவங்க சீக்கிரம் டையர்ட் ஆகிடுவாங்க, ஸோ நீங்கள்லாம் தோனிய பாக்கப் போறீங்க, அவர் முன்னாடி ஆட போறீங்க, அப்புறம் அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்கலாம்ன்னு சொல்லி சொல்லி அவங்கள டிரைன் பண்ணுனோம்.

இருந்தாலும் எங்க சொதப்பிடுவாங்களோன்னு ஒரு பயம் இருந்துச்சி. ஆனா நேர்ல தோனிய பாத்ததும் பசங்க செம்ம ஹேப்பி அண்ட் எனெர்ஜிடிக் ஆகிட்டாங்க.

ஸ்டேஜ்ல தோனி பேசிட்டு இருக்கும் போது திடீர்ன்னு ஒருத்தர் இடைல போய், உங்க கூட செல்ஃபி எடுக்கனும்ன்னு சொல்லி எடுத்துட்டு வருவாரு. அவர் கீழ இறங்கி வரும் போது ‘வந்துட்டோம்ன்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு’ங்கற டையலாக் ப்ளே ஆகும். உடனே நாலு சைடு இருந்து குழந்தைங்க வந்து பர்ஃபாம் பண்ணுவாங்க.

அதுல ஒரு பையன் தோனி மாதிரி ஹெலிகப்டர் ஷாட் அடிப்பான். நாங்களே சொல்லல, திடீர்ன்னு கீழ ஆடுன பசங்க மேல போய் தோனி, ரெய்னா அண்ட் டீம் முன்னாடி ஆடுனாங்க. ப்ளேயர்ஸ் கூட ஆடுறது தான் ப்ளான், பட் பாதுகாப்பு கருதி அவங்களால ஆட முடில. அப்புறம் நாங்க எல்லாரும் ‘வெல்கம் பேக்’னு கைல கார்டு வச்சி வெல்கம் பண்ணுனோம். கடைசில சி.எஸ்.கே-க்கு விசில் போடுங்கற டையலாக்கோட முடிச்சோம்.

இதை தோனி அண்ட் டீம் செம்ம என்ஜாய் பண்ணுனாங்க. கடைசில பேசுன தோனி, பசங்க பண்ணுனது ரொம்ப நல்லாருந்தது. இந்த மாதிரி எக்ஸ்ட்ரா கரிகுலர்ல எல்லா பெற்றோர்களும் பசங்கள ஈடுபடுத்தனும், அதே மாதிரி விளையாட்டையும் ஊக்குவிக்கனும் சொன்னாரு. மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சி, என்ற போது நமக்கும் ‘வாவ்’ என்றிருந்தது!

Link: https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/37887-surprise-machi-start-up-5.html

Surprise Machi © 2020